படிக்கட்டில் நின்று பயணம் செய்தால் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ்


பஸ் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தால் பள்ளி, கல்லூரியில் இருந்து மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். இதை பொதுநல
வழக்காக எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடந்த விவாதம் வருமாறு:அட்வகேட் ஜெனரல் நவனீத கிருஷ்ணன்: பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானதும் அரசு விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது.

தலைமை நீதிபதி: அரசு அதிகமான பஸ்களை இயக்காதது ஏன்? இப்படி தொடர்ந்து படிக்கட்டு பயணம் நடக்கிறது. இதை அரசு தடுக்காதது ஏன்? அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?அட்வகேட் ஜெனரல்: ஓஎம்ஆர். சாலையில் காலை வேளையில் 8 முதல் 9 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் ஒருசேர மாணவர்கள் வருவதால் அந்த பஸ்சில் நெரிசல் ஏற்படுகிறது. படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்று பல முறை எச்சரித்தும் இது தொடர்கிறது. பலியான மாணவன் ஒருவனை அவன் தங்கை, பஸ்சின் உள்ளே வரும்படி கூறியுள்ளாள். ஆனால் அவன் வரவில்லை. அப்போது தான் இந்த விபரீதம் நடந்துள்ளது. தலைமை நீதிபதி: பஸ்களை அதிகபடுத்தினால் போதாது; விபத்தை குறைக்க வேண்டும். அட்வகேட் ஜெனரல்: கூடுதல் போலீஸ் கமிஷனர் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  ர் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

* படிக்கட்டில் பயணம் செய்வோர், அதில் இருந்து இறக்கி விடப்பட்டு அடுத்த பஸ்சில் ஏற்றிவிடப்படுவர்.
* பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பஸ் பயணம் ஆபத்தானது என்று விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
*  டிரைவர், கண்டக்டர்களுக்கும் ஆலோசனை கூறப்படும் என்றும், பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
*  தொடர்ந்து படிக்கட்டு பயணம் செய்தால் அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் புகார் செய்யப்படும்,   
*  பள்ளி, கல்லூரியில் இருந்து அந்த மாணவர்கள் உடனே டிஸ்மிஸ் செய்யப்படுவர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி: அரசு தரப்பில் கூறியதையும், போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கூறியதையும் பரிசீலனை செய்து பார்த்தோம். அதை உடனே பின்பற்ற வேண்டும். மேலும் ஒன்றை கூறிக் கொள்கிறோம். தொடர்ந்து பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் பற்றி பெற்றோர்களிடம் கூறினால் போதாது, பள்ளி முதல்வர்களிடம் புகார் கூறி அந்த மாணவனை பள்ளியை விட்டு நீக்க வேண்டும். இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் 2ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

No comments:

Post a Comment