டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் உதயசந்திரன் விடுவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயசந்திரன் புதன்கிழமை விடுவிக்கப்பட்டார். அவர் குன்னூரில் உள்ள தேயிலை உற்பத்திக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய செயலாளராக தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக இருந்த உதயசந்திரன், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். இந்த நிலையில், குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிறகு அவர் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment