குழந்தைகளைப்பற்றி ஜவஹர்லால் நேரு வின் கடிதம் !!!!

நேரு மிகச்சிறந்த பேச்சாளர், தி டிஸ்கவரி ஆப் இந்தியா மற்றும் ஆட்டோபயாகிராபி எனும் அவரது புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை.


அவர் குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில்...

குழந்தைகளுடன் இருப்பதை நான் விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். ஏன்... விளையாடவும் விரும்புகிறேன். அப்படி விளையாடும் போது, நான் வயதானவன் என்பதை மறந்துவிடுகிறேன். குழந்தைப் பருவம் மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதையும் மறந்து விடுகிறேன். ஆனால் நான் எழுத உட்காரும் போது, என் வயதும் தூரமும் குழந்தைகளாகிய உங்களிடமிருந்து என்னை பிரித்து விடுகின்றன. வயதானவர்கள் இளையோருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்... என்று எழுதியிருந்தார். 
குழந்தைகள்...விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்படும் வெள்ளை உள்ளங்கள்! இவர்களுக்காக உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 1959ம் ஆண்டும் முதல் நவம்பர் 20ம் தேதியை  குழந்தைகளுக்கான தினமாக உலகமே கொண்டாடினாலும், இந்தியாவில் மட்டும் குழந்தைகள் தினம் நவம்பர் 14. காரணம், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. 

நாம் குழந்தைக்காக பாடும் பாட்டுகளில், பாரதியாரின் பாப்பா பாட்டு, மிகவும் சிறந்தது. இந்த பாட்டை பாட்டினால், எப்படி திறமையோடு வளர வேண்டும், பிறரிடம் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும், தேசப் பற்றும், மொழிப் பற்றும் வளர்த்துக் கொள்ள வேண்டும், விலங்குகள் நமக்கு நண்பன் போன்ற நல்ல கருத்துகளை வளர்க்கும். 

ஓடி விளையாடு பாப்பா! -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா. 
சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! (9)

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா!

தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ

திடங்கொண்டு போராடு பாப்பா!
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர். (15)

உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா

No comments:

Post a Comment