அரையாண்டு தேர்வு டிசம்பர் 19ம் தேதி துவக்கம்

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கான அரையாண்டு பொதுத் தேர்வுகள் டிசம்பர் 19ம் தேதி துவங்குகின்றது.
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு நவம்பர் 19ம் தேதி முதல் ஜனவரி 07ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகிறது.
மாணவர்கள் தேர்வு அறைக்கு 10 நிமிடம் முன்னதாகவே வர வேண்டும். காலை 10 மணிக்கு தேர்வுக்கான வினாத்தாள் வழங்கப்படும். 10 நிமிடம் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்வதற்கும் நேரம் வழங்கப்படும். 10.15 முதல் 1.15 வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment